ஏற்கனவே 2014ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் உருவான வீரம் மற்றும் விஜய் நடிப்பில் உருவான ஜில்லா ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்தன.

வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரஜினி அஜித் திரைப்படங்கள் நேரடியாக திரையில் போதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அஜித் விஜய் திரைப்படங்கள் திரையில் மோதிக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது இதன்காரணமாக இந்த திரைப்படம் நவம்பர் மாதம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கனவே சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் அஜீத் ரஜினி திரைப்படங்கள் ஒரே நாளில் திரையில் போதும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஏற்கனவே ரஜினியின் பேட்ட, மற்றும் அஜித்தின் விசுவாசம் ஆகிய திரைப்படங்கள் ஒரே தினத்தில் வெளியாகி இரண்டு திரைப்படங்களும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் லாபகரமாக அமைந்தது.

இதே போன்ற ஒரு சூழல் மீண்டும் திரைத்துறையில் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வலிமை திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக தீபாவளி தினத்தில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தோடு சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் போட்டிக்கு வெளியாகும் என தெரியவந்துள்ளது.

வலிமை திரைப்படம் திட்டமிடப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படமும் தயாராகி வருவதால் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஜித் விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் திரைக்கு வரும் சூழல் உருவாகி உள்ளது.

ஏற்கனவே 2014ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் உருவான வீரம் மற்றும் விஜய் நடிப்பில் உருவான ஜில்லா ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்தன. இதை அடுத்து அஜித் விஜய் திரைப்படங்கள் நேரடியாக தரையில் மோதுவது தவிர்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் வலிமை – பீஸ்ட் ஆகிய திரைப்படங்கள் நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது.

டாக்டர் திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துவரும் பீஸ்ட் திரைப்படம் இரண்டு கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள நிலையில் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை குறிவைத்தே இறுதிகட்ட பணிகளை எட்டி வருகிறது.

தற்பொழுது வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வலிமை திரைப்படத்துடன் மோதும் முடிவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுப்பார்களா அல்லது வேறு தேதியை முடிவு செய்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here