சென்னையில் டிசம்பர் 11-ம் தேதி (சனிக்கிழமை) அன்று தாம்பரம் பகுதியில் ஒரு நாள் மின் தடையைத் தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக மின்வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“சென்னையில் 11.12.2021 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பராமரிப்புப் பணி காரணமாக குறிப்பிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மாலை 4.00 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும்.

தாம்பரம் பிரிவு: கோவிலம்பாக்கம் எஸ்.கொளத்தூர் மெயின் ரோடு, சத்தியா நகர், காந்தி நகர், வாட்டர் கம்பெனி கே.பி.ஜி நகர், பிள்ளையார் கோயில் தெரு, பொன்னியம்மன் மெயின் ரோடு, சின்னப்பா நகர், விடுதலை நகர், ராஜம் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.”

மேற்கண்ட இடங்கள் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.