தஞ்சாவூரைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சி நிர்வாகி. இவர் சமூக வலைதளங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, நடிகை குஷ்புகுறித்து அவதூறு பதிவை பதிவிட்டதாக கைது செய்யப்பட்டார். இதில் துரைமுருகன் உயர் நீதி

மன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இனிமேல் அவதூறு கருத்துகளை பரப்ப மாட்டேன் என உறுதிமொழி பத்திரமும் வழங்கினார். அதன்பேரில் துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தக்கலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர்மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக துரைமுருகனைபோலீஸார் கைது செய்தனர். மேலும் கருணாநிதி, குஷ்பு குறித்துஅவதூறாக பேசிய வழக்கில் துரைமுருகனுக்கு அளித்த ஜாமீனைரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் போலீஸார் மனுத் தாக்கல் செய்தனர்.

இம்மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் அரசியல் தலைவர்களை இனிமேல் அவதூறாக விமர்சிக்கமாட்டேன் என நீதிமன்றத்தில் உறுதிமொழி வழங்கியுள்ளார். அதன் பிறகும் முதல்வர் குறித்து அவதூறாக பேசியுள்ளார். உறுதிமொழியை மீறியதால் துரைமுருகனின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். உறுதிமொழி கடிதம் அளித்த பிறகு துரைமுருகன் மீது6 வழக்குகள் பதிவாகி உள்ளன என்றார்.

அப்போது நீதிபதி, “தமிழகமுதல்வர், அவரால் எவ்வளவு முடியுமோ, அதைவிட அதிகமாகவே பணிபுரிந்து வருகிறார். முதல்வரை பாராட்டாவிட்டாலும், விமர்சனம் செய்வதை தவிர்க்கலாம்.துரை முருகனின் பேச்சு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்என்றார். அதற்கு அரசு வழக்கறிஞர், சிடியாக தாக்கல் செய்யப்படும் என்றார். பின்னர் துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியிருந்தால் அவரது ஜாமீன் ரத்து செய்யப்படும் எனநீதிபதி கூறினார்.