தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் கோயமுத்தூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் கோயமுத்தூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஜூன் 18 அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வெப்பச் சலனத்தின் காரணமாக

ஜூன் 19, ஜூன் 20 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, சென்னை, புதுவை பகுதியில் ஒரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
ஜூன் 21 அன்று தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அளவு

அவலாஞ்சி (நீலகிரி) 21 சென்டிமீட்டர், மேல் பவானி (நீலகிரி) 12 சென்டிமீட்டர், எமரால்ட் (நீலகிரி) 13 சென்டிமீட்டர், சின்னக்கல்லார் (கோவை) 10 சென்டிமீட்டர், பந்தலூர் (நீலகிரி) 9 சென்டிமீட்டர், வால்பாறை (கோவை) 8 சென்டி மீட்டர், சின்கோனா (கோவை) 7 சென்டி மீட்டர், பெரியாறு (தேனி) 6 சென்டிமீட்டர், ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி) 5 சென்டிமீட்டர், பாபநாசம் (திருநெல்வேலி) 4 சென்டிமீட்டர், தென்காசி 3 சென்டிமீட்டர், ஏற்காடு (சேலம்), திண்டிவனம் (விழுப்புரம்) தலா 2 சென்டிமீட்டர், பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 1 சென்டிமீட்டர்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்க கடல் பகுதிகள்

ஜூன் 17 முதல் 18 வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஜூன் 17, 18 ஆகிய தேதிகளில் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூன் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வடக்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதியில்

ஜூன் 17 முதல் 19 வரை கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூன் 17 முதல் ஜூன் 21 வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

14 COMMENTS

  1. I have not checked in here for some time because I thought it was getting boring, but the last several posts are great quality so I guess I抣l add you back to my everyday bloglist. You deserve it my friend 🙂

  2. آشغال ترین و افتضاخ ترین سئوکار ایران محمد غلامی تو مشهدهمحمد غلامی

  3. Aw, this was an incredibly nice post. Spending some time and actual effort to produce a top notch articleÖ but what can I sayÖ I put things off a lot and never seem to get nearly anything done.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here