செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சிக்கியவை என்னென்ன? அமலாக்கத்துறை வெளியிட்ட தகவல்!

செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 9 இடங்களில் நடந்த சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியிருப்பதாக அமலாக்கத்துறை இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 3 ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிFile image

இதனை தொடர்ந்து கரூர், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்கள், அவரது சகோதரர், ஒப்பந்ததாரர்கள் என்று அனைவருக்கும் சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

தற்போது நீதிமன்ற காவலில் உள்ள செந்தில்பாலஜிக்கு சொந்தமான இந்த இடங்களில் நடத்தபட்ட சோதனையில் கணக்கில் வராத சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக அமலாக்கத்துறையானது இன்று (5.8.2023) தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் “கணக்கில் வராத 22 லட்சம் ரூபாய் ரொக்கப்பணமும், 16.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான  விலை உயர்ந்த பொருட்களையும் அமலாக்கத்துறையானது பறிமுதல் செய்துள்ளது. மேலும் 60 நில ஆவணங்களையும் முடக்கப்பட்டுள்ளது” என அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் கையகப்படுத்தப்பட்ட ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையில் தெரிவிக்கப்பட்டு கிடைக்கபெற்ற ஆவணங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் விசாரணையானது மேற்கொள்ளப்படும் என்றும், இதன் அடிப்படையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அடுத்த கட்ட விசாரணையானது நடைபெறும் என்றும் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை தொடங்கியுள்ளது.