மத்திய கலாச்சார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சுதந்திர தினத்தையொட்டி இந்தியர்கள் தங்கள் குரலில் தேசிய கீதத்தைப் பாடி அந்த வீடியோவை பதிவேற்றம் செய்யு மாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதன்படி பல மாநிலங்களில் இருந்தும் இந்தியர்கள் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். குழந்தைகள், பெண்கள் தொடங்கி முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் இதில் உற்சாகமாகக் கலந்து கொண்டுள்ளனர்.
கலைஞர்கள், கல்வியாளர்கள், தலைவர்கள், அதிகாரிகள், ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள் என இந்நிகழ்ச்சியில் உற்சாகமாக பங் கேற்றுள்ளனர். ஜன கன மன.. என்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், அருணாச்சல் தொடங்கி கட்ச் வரையிலும் ஓங்கி ஒலிக்கிறது. 1.5 கோடி பேர் தேசிய கீதத்தை பாடி பதிவிட்டுள்ளனர். தேசிய கீதம் நம் பெருமிதத்தின் அடையாளம். இந்த முயற்சி, அனைவருக்கும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. இந்தியாவின் ஒருமைப்பாட்டை உணர்ந்து கொள்ள அழுத்தமான செய்தியை இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. – பிடிஐ