மும்பை: மும்பையில் இன்று முதல் ஜூலை 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்க்க முயற்சிப்பதாக மும்பையில் சிவசேனா தொண்டர்கள் கொந்தளித்துள்ளனர். பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள், அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.