சென்னையில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் 3 புதிய டயாலசிஸ் மையங்கள் அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்து மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் சுகாதாரத்துறையை மேம்படுத்த 8 அறிவிப்புகளை மேயர் பிரியா ராஜன் வெளியிட்டார். இதில், சென்னையில் அரசு மருத்துவமனைக்கு செல்லும் 10 சதவீத பேரை மாநகராட்சி மருத்துவமனையை பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

3 டயாலிசிஸ் மையங்கள் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்,

மாநகர மருத்துவமனை கட்டிடங்களில் மேற்கூரை கசிவுகளை சரிசெய்தல் மற்றும் இதர கட்டுமானப் பணிகள் பராமரிப்பு மற்றும் மருத்துவமனை கட்டிடங்களின் பழுது பார்க்கும் பணிகளுக்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்,

வீடற்றோருக்காக 3 புதிய காப்பகங்கள் கட்ட ரூ. 2.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்,

மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரில் தெரு நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள் இரண்டு அமைக்க ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்,

அனைத்து களபணியாளர்களுக்கும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

மன வளர்ச்சி குன்றி சாலையில் இருக்கும் நபர்களை தங்க வைக்க அனைத்துத் துறைகளுடன் இணைந்து ஒரு திட்டம் தயார் செய்யப்படும், உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here