சென்னை: ஜெயம் ரவியின் 32வது படம் ‘ஜெனி’. இதன் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி, வாமிகா கபி ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்கின்றனர். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் 25-வது படம் இது. ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார். அர்ஜுனன் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகிறது.
சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த ஃபேன்டசி படத்துக்காகச் சென்னை அருகே உள்ள ஸ்டூடியோ ஒன்றில் பிரம்மாண்ட பங்களா செட் அமைக்கப்பட்டுள்ளது. அதில், முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. அடுத்த ஷெட்யூல் ஊட்டியில் நடக்க இருக்கிறது. அங்கும் பிரம்மாண்ட செட் அமைக்க உள்ளனர்.