சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக பொதுக்குழு மற்றும் மாநாடு தள்ளி வைக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்

துள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதையடுத்து மார்ச் 7-ம் தேதி நடத்தப்படவிருந்த நமது கட்சியின் பொதுக்குழுவும், மார்ச் 14-ம் தேதி திருச்சியில் நடைபெறுவதாக இருந்த மாநில மாநாடும் தற்போது தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர சட்டப்பேரவை தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, இ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி உட்பட 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.