டெல்லி: உத்தரகாண்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பகவத் கீதை வாசிப்பதை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய கலாச்சாரம், வாழ்க்கை தத்துவங்களுடன் மாணவர்களை ஒருங்கிணைத்து, முழுமையான வளர்ச்சிக்கு வழிவகுக்க இந்த முயற்சி உதவும் என உத்தரகாண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது. எக்ஸ் சமூக ஊடகத்தில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள பதிவில், “அரசுப் பள்ளிகளில் கீதையின் வசனங்களை ஓதுவதை எங்கள் அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. இந்த முயற்சி மாணவர்களை இந்திய கலாச்சாரம், தார்மீக விழுமியங்கள் மற்றும்...
