அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதாவை அதிமுக முழுமனதுடன் ஆதரிப்பதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்கள் தொழிற்படிப்புகளில் சேர்வதற்கான 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கான சட்டமுன்வடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையி்ல் தாக்கல் செய்தார்.

பல்கலைக்கழகங்கள், சுயநிதிக்கல்லூரிகள் மற்றும் அரசுக்கல்லூரிகள், பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை மருத்துவம், சட்டப்படிப்புகளில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு பிரநிதிதுவம் பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டது. இதன் அடிப்படையில் டில்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் அரசுப்பள்ளி மாணவர்கள் தொழிற்படிப்புகளில் சேருவதற்கான சாதகமற்ற சூழல் இருப்பதாகவும், அதிகமாக வசதிகள் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதற்கு முன்னுரிமை தேவைப்படுறது என்று தெரிவித்துள்ளது. மேலும் அறிவினை வளப்படுத்தவும், நியாயமான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழவும் கல்வி முக்கியமாக இருப்பதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வியில் இணக்கான சூழ்நிலை வழக்கவேண்டியதுள்ளது.

இதற்கு தனியார் பள்ளி மாணவர்களுடன் ஒப்பிடும் போது உயர் கல்வியில் முன்னுரிமை வழங்க கவனம் தேவைப்படுகிறது. எனவே அரசு பள்ளி மாணவர்கள் சமூக பொருளாதார நிலையில் அனுபவித்த குறைப்பாடுகள் மற்றும் கடந்த கால சேர்க்கையை கருத்தில் கொண்டு தொழிற்படிப்பகளில் 10 சதவீதத்திற்கும் குறையாத இடங்களை ஓதுக்கீடு செய்வதற்கு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என்று சட்டமுன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அரசு ஆணையத்தின் பரிந்துரைகளை கவனமாக பரிந்துரை செய்து தொழிற்படிப்பு சேர்க்கையில் மாநில அரசுப்பள்ளிகளில் ஆறுமுதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களிடையே உண்மையான சமத்துவத்தை ஏற்படுத்த அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்து இந்த சட்டமுன்வடி தாக்கல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

தொடர்ந்து, மசோதா குறித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்இட ஒதுக்கீடு ஒழங்கும் சட்ட மசோதாவை அதிமுக வரவேற்கிறது. முதல்வர் முன்மொழிந்த மசோதாவை முழு மனதுடன் அதிமுக ஆதரிக்கிறது என்று அவர் கூறினார்.

இச்சட்டமுன்வடிவை அதிமுக ஒருமனதாக வரவேற்றதையடுத்து, இச்சட்டமுன்வடிவு கூட்டத்தொடரின் இறுதி நாளில் குரல் வாக்கெடுப்புமூலம் பேரவையில் நிறைவேற்றப்படவுள்ளது