ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘Kaavaalaa’ ஜூலை 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான ப்ரோமோ வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘Kaavaalaa’ பாடல் ஜூலை 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, அது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுவாக இயக்குநர் நெல்சன் தனது படங்களின் சிங்கிள் பாடலுக்கான அறிவிப்பை ஜாலியான வீடியோ மூலமாக அறிவிப்பது வழக்கம். அப்படி இம்முறை இசையமைப்பாளர் அனிருத்திடம் இயக்குநர் நெல்சன் ஃபர்ஸ்ட் சிங்கிளை கேட்டு பெற நடத்தும் போராட்டமாக ஜாலியான வீடியோவாக உருவாகியுள்ள இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘பீஸ்ட்’ படத்தில் ‘அரபிக்குத்து’ என அரபியை வைத்து வித்தியாசமாக முயற்சித்த அவர் இம்முறை தெலுங்கு வார்த்தைகள் கொண்டு இப்பாடலை உருவாக்கியுள்ளதாக தெரிகிறது. நெல்சனிடம் பேசும் அனிருத், ‘ப்ரோமோங்குற பேர்ல கிறிஞ்சு பண்ணுவீங்களே இந்த தடவ பண்ணலயா?’ என கேட்க ‘அது பண்ணாலே எல்லோரும் ஒரு மாதிரி பேசுறாங்க அந்த விளையாட்டு நான் வரல, நேரடியா பாட்ட போட்டுலாம்’ என ப்ரோமோ வீடியோவாக இல்லாமல் அறிவிப்பு வீடியோவாக இதனை ஜாலியாக உருவாக்கியுள்ளார்.