சென்னை: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான ஒரு டிக்கெட்டை பெறுபவர்கள், அன்று நடைபெறும் 3 போட்டிகளையும் காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், கொரியா, சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்நிலையில் இதற்கான டிக்கெட்டு விற்பனை தொடர்பான தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் – 2023, சென்னை போட்டிகள் மேயர் இராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் 2023 ஆகஸ்ட் 03 முதல் 12 வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் இந்தியா, கொரியா, மலேசியா, ஜப்பான். பாகிஸ்தான் மற்றும் விளையாட்டுகின்றன. சீனா ஆகிய 6 நாடுகள் கலந்து கொள்கின்றன.

மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாள் ஒன்றுக்கு மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை காண நாள் ஒன்றுக்கு 4000 டிக்கெட்டுகள் விற்பனைக்காக உள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.300 மற்றும் ரூ.400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு டிக்கெட் வாங்குபவர்கள் அன்று நடைபெறுகின்ற மூன்று போட்டிகளையும் காணலாம். இந்த டிக்கெட்டுக்களை https://ticketgenine.in (https://in.ticketgenie.in/Tickets/Hero-Asian- Champions-Trophy-2023) என்ற இணையதளம் மூலம் பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.