அழிந்து வரும் பவளப்பாறைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக, விஞ்ஞானிகள் கற்றாழை இன பவளப்பூச்சிகளை செயற்கை முறையில் இனப்பெருக்கத்திற்கு ஈடுபடுத்தி வருகின்றனர். புளோரிடா கடல் பகுதியில் பவளப்பூச்சிகளை தாக்கிய புதிய வகை நோயால் பவளப்பாறைகளின் ஆயுட்காலம் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.