உள்ளூர் விடுமுறை மற்றும் பண்டிகை தினம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த குறிப்பிட்ட மாநிலங்களில் செயல்படும் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படும்.

இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான விடுமுறை நாட்களை கொண்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வழங்கிய வங்கி விடுமுறை நாட்களின் அதிகாரப்பூர்வ பட்டியலின் படி, வார இறுதி நாட்களைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் மாதம் மொத்தம் 15 நாட்கள் விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 15 நாட்கள் விடுமுறை பட்டியலில் 7 நாட்கள் வழக்கமான வார இறுதி விடுமுறையாகும். மற்ற எட்டு நாட்களும் ரிசர்வ் வங்கியின் பட்டியலிடப்பட்ட விடுமுறை நாட்களாகும். இந்த எட்டு நாட்கள் என்பது மாநில வாரியான விடுமுறை, மத கொண்டாட்டங்கள் மற்றும் பண்டிகைகளின் கலவையாகும்.

ரிசர்வ் வங்கி இந்த விடுமுறைகளை மூன்று முக்கிய பிரிவுகளின் கீழ் பட்டியலிட்டுள்ளது. அதாவது, ‘பேச்சுவார்த்தைக்குட்பட்ட கருவிகள் சட்டத்தின் கீழ் விடுமுறை’, மற்றும் ‘நிகழ்நேர மொத்த தீர்வு விடுமுறை’ மற்றும் ‘வங்கிகள் கணக்குகளை மூடுவது ’ ஆகியவற்றின் கீழ் அறிவிக்கப்படும். அதன்படி ஆகஸ்ட் மாதத்தில் பட்டியலிடப்பட்ட விடுமுறைகள் ‘விடுமுறை பேச்சுவார்த்தைக்குட்பட்ட கருவிகள் சட்டத்தின்’ கீழ் வருகின்றன. ​​நாடு முழுவதும் வங்கிகளின் அதிகாரப்பூர்வ விடுமுறை பட்டியல் அடிப்படையில், வங்கிகளின் விடுமுறை தினம் ஆகஸ்ட் 13 ஆம் தேதியில் தொடங்கி ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் இந்த விடுமுறை அனைத்தும் நாடு முழுவதும் பொது விடுமுறையாக அறிவிக்கப்படாது.

உள்ளூர் விடுமுறை மற்றும் பண்டிகை தினம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த குறிப்பிட்ட மாநிலங்களில் செயல்படும் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படும். இருப்பினும் பல மாநிலங்களில் பொது விடுமுறை தினம் இரு நாட்களில் வருகிறது. அதாவது ஆகஸ்ட் 19 அன்று, முஹர்ரம் (அசூரா) பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் அகர்தலா, அகமதாபாத், பெலாப்பூர், போபால், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி மற்றும் ஸ்ரீநகர் உட்பட மொத்தம் 17 நகரங்களில் வங்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

அதேபோல ஆகஸ்ட் 30ம் தேதி அன்று ஜன்மாஷ்டமி (ஷ்ரவன் வாட் -8) அல்லது கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை மொத்தம் 15 நகரங்கள் கொண்டாடவுள்ளன. இந்த நகரங்கள் முறையே அகமதாபாத், சண்டிகர், சென்னை, டெஹ்ராடூன், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் காங்டாக் ஆகும். இந்த இரண்டு நாட்களைத் தவிர, மீதமுள்ள விடுமுறைகள் மற்ற மாநிலங்களுக்கும் நகரங்களுக்கும் இடையில் மிகக் குறைவானவை. அதனுடன், வரவிருக்கும் மாதம் அதிகபடியான விடுமுறை நாட்களை கொண்டுள்ளதால் வங்கிக்கு உங்கள் செல்லும் உங்கள் அடுத்த பயணத்தை கவனமாகத் திட்டமிடுங்கள். சரி இப்போது எந்தெந்த நகரங்களில் எந்த நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து காண்போம்.

ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி, ஆகஸ்ட் 2021 மாதத்திற்கான விடுமுறை நாட்களின் முழு பட்டியல்:

1) ஆகஸ்ட் 1, 2021 – ஞாயிறு விடுமுறை.

2) ஆகஸ்ட் 8, 2021 – ஞாயிறு விடுமுறை.

3) ஆகஸ்ட் 14, 2021 – இரண்டாவது சனிக்கிழமை (வார இறுதி விடுமுறை)

4) ஆகஸ்ட் 13, 2021 – தேசபக்தர் தினம். மணிப்பூரின் இம்பால் நகரத்தில் வங்கிகள் செயல்படாது.

5) ஆகஸ்ட் 15, 2021 – ஞாயிறு விடுமுறை.

6) ஆகஸ்ட் 16, 2021 – பார்ஸ் புத்தாண்டு. ஷாஹென்ஷாஹி / பெலாப்பூர், மும்பை மற்றும் நாக்பூர் நகரங்களில் வங்கிகள் செயல்படாது.

7) ஆகஸ்ட் 19, 2021 – முஹர்ரம் (ஆஷுரா) பண்டிகை. இந்த நாளில் அகர்தலா, அகமதாபாத், பெலாப்பூர், போபால், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி மற்றும் ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் செயல்படாது.

8) ஆகஸ்ட் 20, 2021 – முஹர்ரம் / முதல் ஓணம் பண்டிகை. இந்த தினத்தில் பெங்களூரு, சென்னை, கொச்சி மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் வங்கி விடுமுறை.

9) ஆகஸ்ட் 21, 2021 – திருவோணம் பண்டிகை கேரளாவில் வங்கிகள் செயல்படாது.

10) ஆகஸ்ட் 22, 2021 – ஞாயிறு விடுமுறை.

11) ஆகஸ்ட் 23, 2021 – ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி. திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் வங்கிகள் செயல்படாது.

12) ஆகஸ்ட் 28, 2021 – நான்காவது சனிக்கிழமை (வார இறுதி விடுமுறை).

13) ஆகஸ்ட் 29, 2021 – ஞாயிறு விடுமுறை.

14) ஆகஸ்ட் 30, 2021 – ஜன்மாஷ்டமி (ஷ்ரவன் வாட் -8) / கிருஷ்ணா ஜெயந்தி. அகமதாபாத், சண்டிகர், சென்னை, டேராடூன், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, பாட்னா, ராய்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் செயல்படாது.

15) ஆகஸ்ட் 31, 2021 – ஸ்ரீ கிருஷ்ணா அஷ்டமி. ஹைதராபாத்தில் வங்கிகள் செயல்படாது.

BreakingNews #NewsUpdates #Trend #TrendingNews #Metro_People #TamilNews #Bank #TamilNadu #Close