தமிழகத்தில் நேற்று (ஏப்.28) இதுவரை இல்லாத அளவில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்பாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிக அளவு வெப்பம் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக வீடுகளின் மின்சார பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இதுவரை இல்லாத அளவில் நேற்று மட்டும் தமிழகத்தில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” நேற்று 28/04/22 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 387.047 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மெகாவாட் அளவில் 17,370 MW. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு மார்ச் 2022 இறுதியில், 378.328மி.யூ / 17,196 MW” என்று தெரிவித்துள்ளார்.