பிக் பாஸ் 5-ம் சீசனின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியிருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இது எப்போதும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும். எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் கடந்த வருடம் கொரோனா தொற்றால் தாமதமாக தொடங்கியது.

இந்த வருடமும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தாமதமாக தொடங்குகிறது. கடந்த 4 சீசன்களைப் போலவே இந்த சீசனையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

தவிர பிக் பாஸ் 5-ம் சீசனின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியிருக்கிறது. இன்னும் தேதி அறிவிக்கப்படாத நிலையில் பிக் பாஸ் 5 அக்டோபர் 3-ம் தேதி தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பிக் பாஸ் 5-ம் சீசனில் கலந்துக் கொள்ளும் பிரபலங்களின் பட்டியல் ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. அதன்படி, மிளா (நடிகை ஷகிலாவின் மகள்), நமீதா மாரிமுத்து (நாடோடிகள் 2 பட புகழ்), மாடல் வனேசா குரூஸ், மிஸ்டர் இந்தியா கோபிநாத், பவானி ரெட்டி, பிரியங்கா தேஷ்பாண்டே, ப்ரியா ராமன் போன்ற பெயர்கள் இதில் வலம் வருகின்றன. அதே நேரத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன், ஜி.பி.முத்து, சூசன், பிரதாயினி சுர்வா ஆகியோர் இந்த சீசனில் கலந்துக் கொள்ளவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர். இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.