வரும் ஆகஸ்ட்டில் சந்திரயான்- 3 -ஐ விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதில் அளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:

2022 ஆகஸ்ட்டில் சந்திரயான்-3-ஐ விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சந்திரயான்-2லிருந்து கற்றுக்கொண்டது மற்றும் தேசிய அளவிலான நிபுணர்களின் ஆலோசனைகள் அடிப்படையில் சந்திரயான்-3-ஐ வெற்றிகரமாக்கும் செயல்படுத்தும் நடவடிக்கைகள் வேகமாக நடைபெறுகின்றன.

இது தொடர்பான வன்பொருள்கள் அவற்றின் சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு 2022 ஆகஸ்ட்டில் செலுத்த திட்டமிடப்பட்ட்டுள்ளது.

2022 ஜனவரி முதல் டிசம்பர் வரை 19 முறை 8 கலன்கள் விண்ணில் செலுத்தும் திட்டமும் உள்ளன. இதில் 07 விண்கலத் திட்டங்கள், 04 தொழில்நுட்ப செய்முறை திட்டங்கள் ஆகியவையும் அடங்கும்.

நடைமுறையில் உள்ள பல திட்டங்கள் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டன. விண்வெளித்துறை சீர்திருத்தங்கள், புதிதாக அறிமுகம் செயபப்பட்ட தேவையால் இயக்கப்படும் மாதிரிகள் பின்னணியில் திட்டங்களுக்கு மறுமுன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது . கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.