சென்னை: மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்க, கவுன்ட்டர் டிக்கெட் முறை, பயண அட்டை முறை மற்றும் க்யூ.ஆர் கோடு முறை ஆகிய வசதிகள் முன்பு இருந்தன.

இதன் தொடர்ச்சியாக, செல்போனின் வாட்ஸ் – அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்டை பதிவு செய்ய புதிய திட்டம் கடந்த மே 17-ம் தேதி அறிமுகப் படுத்தப்பட்டது. பயணிகள் தங்கள் செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் மூலம் 83000 86000 என்ற செல்போன் எண்ணுக்கு குறுஞ் செய்தி அனுப்பி மொழி, புறப்படும் இடம்,

சேரும் இடம், டிக்கெட் எண்ணிக்கை ஆகியவற்றை குறிப்பிட்டு, வாட்ஸ் – அப் பே, ஜி பே, நெட் பேங்கிங் மூலமாக பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம். டிக்கெட்டை எங்கிருந்து வேண்டுமென்றாலும் எடுத்து பயணிக்க முடியும். இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்திய சில நாள்களிலேயே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற தொடங்கியது.

இதுவரை ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 468 பேர் டிக்கெட் பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். வாட்ஸ் – அப் முறையை பயன்படுத்தி, கடந்த மே மாதத்தில் 28,894 பேரும், ஜூன் மாதத்தில் 83,982 பேரும், ஜூலை மாதத்தில் 73,592 பேரும் டிக்கெட் எடுத்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.