பிரபல நடிகை சித்ரா மாரடைப்பால் காலமானார்.

‘அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. ரஜினி, ராதிகா நடித்த ‘ஊர்க்காவலன்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ‘சேரன் பாண்டியன்’ படத்தின் மூலம் பிரபலமானார். நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததன் மூலம் நல்லெண்ணெய் சித்ரா என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்துவந்த சித்ரா, இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். இறுதிச் சடங்கு இன்று மாலை அவரது இல்லத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

சித்ராவின் மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

#Chithra #RIPChithra #MetroPeople #NewsUpdates #பிரபலநடிகைசித்ராமாரடைப்பால்மரணம்-திரையுலகபிரபலங்கள்இரங்கல்