சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில்கல்வி உதவித் தொகை கோரி மனு அளித்திருந்த தொகுதியை சேர்ந்த 100 பள்ளி-கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான உதவித் தொகையை சட்டமன்ற உறுப்பினர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கி, அழியாச் செல்வமான கல்வியில் சிறக்க வாழ்த்தினார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் திரு தயாநிதி மாறன் மற்றும் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு சிற்றரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.