44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நேற்று தொடங்கியது. ஓபன் பிரிவிலும், பெண்கள் இந்திய அணிகள் வெற்றிகளை குவித்தன.

44-வது செஸ் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியை நேற்று முன்தினம் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கிவைத்தார்.

இதைத் தொடர்ந்து சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் முதல்சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின.

வரலாற்றுச் சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கச் சுற்றை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், விதித் குஜராத்தியை உள்ளடக்கிய இந்திய ஏ அணியின் ஆட்டத்தின் முதல் நகர்வைச் செய்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து வெளிநாட்டு அணியின் ஆட்டத்தை 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி வைத்தார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சி.வி. மெய்யநாதன், அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர், சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடேவின் தலைவர் அர்காடி டுவர்கோவிச், சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் ஆக மொத்தம் 6 அணிகளும் களமிறங்கின.

ஓபன் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய பி அணியின் வீரரான ரவுனக் சத்வானி முதல் வெற்றியை பதிவு செய்தார். ஐக்கிய அரபு அமீரகத்தின் அப்துல் ரஹ்மான் மொகமதுவை 41-வது நகர்த்தலின் போது வீழ்த்தினார் சத்வானி.

பி அணியில் உள்ள மற்ற வீரர்களான குகேஷ், அல் ஹொசானி ஓம்ரானையும், பி. அதிபன் முகமது சயீத் லைலியையும், ரவுனக் சாத்வானி, அப்துல்ரஹ்மான் மொகமது அல் தாஹெரையும் தோற்கடித்தனர். இதன் மூலம் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தை தோற்கடித்து 2 புள்ளிகளை பெற்றது.

போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்திய ‘ஏ’ அணி, 94-வது இடத்தில் உள்ள ஜிம்பாப்வே அணியுடன் (94-வது தர வரிசை) மோதியது. இந்திய அணியில் விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகையாசி, எஸ்.எல். நாராயணன், கே. சசிகிரண் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் விதித் குஜராத்தி, மகதோ ராட்வெல்லையும், அர்ஜுன் எரிகையாசி, மசாங்கோ ஸ்பென்சரையும், எஸ்.எல். நாராயண் முஷோரையும், கே.சசிகிரண் ஜெம்பா ஜெமுசியையும் வென்றனர். இதன் மூலம் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வேவை வென்று 2 புள்ளிகளை கைப்பற்றியது.

தர வரிசையில் 16-வது இடத்தில் உள்ள இந்திய ‘சி’ அணி 109-வது இடத்தில் உள்ள தெற்கு சூடான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் இந்திய அணி சார்பில் எஸ்.பி.சேதுராமன், அபிஜீத் குப்தா, முரளி கார்த்திகேயன், அபிமன்யு புரானிக் ஆகியோர் விளையாடினர்.

அபிஜீத் குப்தா அஜாக் மாக் துவானியையும், கார்த்திகேயன் முரளி, காங் தான் காங்கையும், புரானிக் அபிமன்யு பீட்டர் மஜுர் மன்யாங்கையும் சேதுராமன், ரெஹான் டெங் சிப்ரியானோவையும் வென்றனர். இதன் மூலம் இந்திய அணி 2 புள்ளிகளை முழுமையாக பெற்றது. மகளிர் பிரிவில் தர வரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய ‘ஏ’ அணி முதல் சுற்றில் 80-வது இடத்தில் உள்ள தஜிகிஸ்தானுடன் மோதியது.

இதில் இந்திய அணியின் கோனேரு ஹம்பி, ஆர். வைஷாலி, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி ஆகியோர் களமிறங்கினர். இதில் கோனேரு ஹம்பி, அன்டோனோவா நாடேஸ்டாவையும், ஆர். வைஷாலி அப்ரோரோவா சப்ரினாவையும், பக்தி குல்கர்னி ஹொடாமி முத்ரிபாவையும் தோற்கடித்தனர். இதன் மூலம் இந்திய அணி 4-0 என தஜிகஸ்தானை வீழ்த்தி முழுமையாக 2 புள்ளிகளை பெற்றது.

11-வது இடத்தில் உள்ள இந்திய ‘பி’ அணி வேல்ஸ் (90-வது இடம்) அணியுடனும் மோதியது. இதில் இந்திய அணியின் வனிதா அகர்வால், சவுமியா சாமிநாதன், மேரி ஆன் கோம்ஸ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் விளையாடினர். இதில் வந்திகா அகர்வால், ஸ்மித் ஒலிவியாவையும், சவுமியா சுவாமிநாதன் சாங் கிம்பர்லியையும், மேரி ஆன் கோம்ஸ் ரே ஹியாவையும், திவ்யா தேஷ் முக் பக்கா குஷியையும் சாய்த்தனர். இதன் மூலம் இந்திய அணி 4-0 என வேல்ஸ் அணியை தோற்கடித்து 2 புள்ளிகளை முழுமையாக கைப்பற்றியது.

இந்திய ‘சி’ அணி (16-வது இடம்) ஹாங்காங்குடன் (95-வது இடம்) மோதின. இதில் இந்திய அணி சார்பில் ஈஷா கரவாடே, பி.வி. நந்திதா, வர்ஷினி சஹிதி, பிரத்யூஷா போதா ஆகியோர் களம் கண்டனர். இதில் ஈஷா கரவாடே, சிகப்பி கண்ணப்பனையும், பி.வி.நந்திதா,டெங் ஜிங் ஜின் கிரிஸ்டலையும், வர்ஷினி சஹிதி லி ஜாய் சிங்கையும், பிரதியூஷா போத்தா, லாம் காயைனையும் வீழ்த்தினர். இந்திய குழுவின் 4 வெற்றிகளால் இந்த பிரிவிலும் இந்திய அணிக்கு முழுமையாக 2 புள்ளிகள் கிடைத்தது.

ஹரிகா, பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வு

இந்த முதல் சுற்று ஆட்டங்களின்போது இந்திய மகளிர் அணியின் ஹரிகா துரோணவல்லி, ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா உள்ளிட்டோருக்கு ஓய்வு தரப்பட்டது. இதில் ஹரிகா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். முக்கியமான ஆட்டங்களில் மட்டுமே அவர், களமிறக்கப்படுவார் என இந்திய அணி பயிற்சியாளர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.