சிங்கம்புணரி: மதுரையில் ரூ.99 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் மிக பிரம்மாண்டமாக கட்டப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவுமதுரை வந்த முதல்வர்ஸ்டாலின், கலைஞர் நூலகம் கட்டுமானப் பணியை பார்வையிட்டார்.
மதுரையில் இருந்து இன்றுகாலை 9 மணிக்கு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேகோட்டை வேங்கைப்பட்டிக்கு வரும் முதல்வர், அங்கு 9 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருந்தசமத்துவபுரத்தைத் திறந்து வைக்கிறார்.
பின்னர் காரையூர் சோளம்பட்டி விலக்கில் நடக்கும் விழாவில், 59 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.240 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.