கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகிறது இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.73.50 உயர்ந்து சிலிண்டர் ரூ.1,761 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
கடந்த மாதம் வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.1687.50 க்கு விற்கப்பட்டது.