உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

Baby's First Bath: Sponge, Tubs, Soap, and More

மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் சேர்க்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உலக தாய்ப்பால் வார விழா குறித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழந்தைச் செல்வத்தை எதிர்நோக்கியுள்ள எனதருமை சகோதரிகளே தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதை விட உங்கள் குடும்பத்தில் ஒருவனாக உங்கள் நலனில் அக்கறை கொண்டவனாக உங்களை பத்திரிகைச் செய்தியின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று முதல் அடுத்த ஏழு தினங்கள் உலக தாய்ப்பால் வார விழாவை உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் செழிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தாய்க்கும், சேய்க்கும் பல நல்ல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி மக்கள் நலனில் இந்த அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.

குழந்தையின் முதல் 1000 நாட்கள் அதாவது தாயின் வயிற்றில் கரு உருவானது முதல் இரண்டு வயது வரையிலான நாட்கள் அந்த குழந்தையின் ஒட்டுமொத்த எதிர்கால வளர்ச்சியை தீர்மானிக்கிறது என மருத்துவர்கள் தெரிவிப்பதால், இந்த முதல் 1,000 நாட்களில் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இந்த வாரம் உலக தாய்ப்பால் வாரம் தாய்ப்பாலின் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துச் செல்லும் இந்த தருணத்தில் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தவறாமல் தாய்ப்பால் அளிக்க வேண்டும். 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். ஆறு மாதம் முதல் தாய்ப்பாலுடன் இணை உணவும் தொடர்ந்து கொடுங்கள் என்று பணிவோடு, ஒரு சகோதரனாய் கேட்டுக் கொள்கிறேன். தாயும் சேயும் நலமுடன் வாழ இத்தருணத்தில் அன்போடு வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.