தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல், சளி, தொண்டைவலி, உடல்சோர்வு இருந்ததால் நேற்று முன்தினம் அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அரியலூரில் உள்ள வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் அமைச்சர் சிவசங்கருக்கு முதல்முறையாக கரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது 2-வது முறையாக அவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

ஆட்சியருக்கும் தொற்று

இதேபோல, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்  வெங்கடபிரியாவுக்கு காய்ச்சல், சளி, உடல்சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் பெரம்பலூரில் உள்ளஇல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.