அரசின் கல்வித் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரி பதவிக்கு தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொலைநிலைக் கல்வி வாய்ப்பு களை வழங்குவதற்காக மாநில கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக கல்வித் தொலைக்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர கல்வித் தொலைக்காட்சிகான யூடியூப் தளம் மற்றும் செல்போன் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பணி முன் அனுபவம்

இந்நிலையில் தற்போதைய காலத்துக்கேற்ப கல்வித் தொலைக்காட்சியை மறுகட்டமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.அதற்கேற்பமுதல்கட்டமாக கல்வித் தொலைக்காட்சி பணிகளை நிர்வாகிக்க தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ)பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு கல்வி நிகழ்ச்சிகள் தயாரிப்பில் 5 முதல் 8 ஆண்டுகள் முன் அனுபவமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும்போது தங்கள் பணி அனுபவங்கள் மற்றும் ஊதியஎதிர்பார்ப்பை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். அதிலிருந்து தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். விருப்ப முள்ள பட்டதாரிகள் https://forms.gle/KPvFRsK5JHwf9gd68 என்ற தளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கல்வித்தகுதி உட்படகூடுதல் விவரங்களை https://tnschools.gov.in/ என்ற பள்ளிக்கல்வியின் இணைய தளத்தில் அறிந்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.