நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மதுரை மாநகராட்சியில் முக அழகிரி வார்டில் 35 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

மதுரை மாநகராட்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வசிக்கும் வீடு டிவிஎஸ்.நகரில் உள்ள சத்தியசாய் நகரில் உள்ளது. இவரது வீடு இருக்கும் பகுதி மாநகராட்சியின் வார்டு 78வது வார்டு அமைந்துள்ளது. இந்த வார்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் தமிழ்செல்வி பழனிச்சாமி என்பவர் போட்டியிட்டார். இவர் 4,022 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி தொடர்பாக திமுக வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 35 ஆண்டாக 78வது வார்டை திமுக, அதன் கூட்டணி கட்சிகளுக்கே விட்டுக் கொடுத்தது. தற்போது முதல் முறையாக திமுக நேரடியாக போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளது. தொடர்ந்து வார்டு மக்களுக்கு தேவையான நடவடிக்கைச் செய்துக் கொடுத்து இந்த வார்டினை திமுக தக்க வைத்துக் கொள்ளும் என தெரிவித்தனர்.