பிரதமர் மோடிக்கு எதிராக ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி-க்கு எதிராக பிரபல திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் ட்விட்டரில் நேற்று கூறியதாவது.
கடந்த 1947-ம் ஆண்டு இந்திய சுதந்திரத்தின் போது, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பேசும்போது, இந்திய தலைவர்கள் அனைவரும் திறன் குறைந்தவர்கள், பலவீனமானவர்கள் என்று பேசினார். அவர் மீதும் பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பிரிட்டனின் நேசத்துக்குரிய தலைவர்களில் ஒருவரான வின்ஸ்டன் சர்ச்சிலைப் பற்றிய உண்மைகளை சொல்ல பிபிசிக்கு எப்போதாவது தைரியம் இருந்ததா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
வங்கப்பகுதியில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்துக்கு பொறுப்பு அவர்தான். லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு காரணம் அந்த பஞ்சம்தான். அதை ஏற்படுத்தியவர் சர்ச்சில். அப்பகுதியில் வசித்த குர்துகள் எனப்படும் பழங்குடியினர் மீது ரசாயன குண்டுகளை வீசிய முதல் நபர் சர்ச்சில்தான். இவ்வாறு சேகர் கபூர் கூறியுள்ளார்.