ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியில் 2016-ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட முக்குலத்தோர் புலிப்படை நிறு வனத் தலைவர் நடிகர் கருணாஸ் மீது தேர்தல் விதிமுறையை மீறி பேனர் வைத்ததாக, திருவாடானை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக ராமநாதபுரம் முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் கருணாஸ் நேற்று ஆஜரானார்.

அதன்பின் நடிகர் கருணாஸ் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: தற்போது அரசியல் சேவையாக இல்லாமல் வியாபாரமாக மாறி விட்டது. ஜெயலலிதா இல்லாமல் அதிமுக வேர் இல்லாத மரமாக உள்ளது. இப்படியே சென்றால் திமுகவும், பாஜகவும் அதிமுக தொண்டர்களை பிரித்துக் கொள்வர். தற்போது அதிமுகவுக்கு அதிகாரமிக்க, ஆளுமை மிக்க தலைவர்தான் தேவை. இரட்டைத் தலைமை வேலைக்கு ஆகாது என்றார்.