ஒவ்வொரு நொடிக்கும் 4 ஸ்கூட்டர் என்ற வகையில் விற்பனை இருந்ததால ஓலா தலைவர் பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.

ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை தொடங்கிய முதல் நாளில் 600 கோடி ரூபாய்க்கு ஸ்கூட்டர்கள் விற்பனையாகி வியப்பான சாதனையை படைத்திருக்கிறது.

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதியன்று ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்தது. பின்னர் செப்டம்பர் 15ம் தேதி முதல் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது. செப் 15 மற்றும் 16 என இரண்டு நாட்கள் மட்டுமே விற்பனை ஆன்லைன் மூலமாக ஓலா ஆப் வாயிலாக நடைபெற்றிருக்கிறது.

முதல் நாள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஓலா நிறுவன தலைவர் பாவிஷ் அகர்வால், செப் 15ம் தேதி ஒரே நாளில் மட்டும் 600 கோடி ரூபாய்க்கு ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நடைபெற்றிருப்பதாகவும், ஒவ்வொரு நொடிக்கும் 4 ஸ்கூட்டர் என்ற வகையில் விற்பனை இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஓலா நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டீலர்ஷிப்கள் இல்லாமல் நேரடியாகவே விற்பனை செய்து வருகிறது. ஓலா ஆப் மூலம் புக் செய்தால், வீடுகளுக்கே நேரடியாக ஸ்கூட்டர்கள் டெலிவரி செய்யப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:

* Ola S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2.98kWh பேட்டரி மூலம் இயங்கும். Ola S1 Pro ஸ்கூட்டர் 3.97kWh பேட்டரி மூலம் இயங்கும்.

* Ola S1-ன் டாப் ஸ்பீட் 90kmph, Ola S1 Pro-ன் டாப் ஸ்பீட்115kmph

* ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் Ola S1 121கி.மீ தூரம் வரையிலும், Ola S1 Pro 181கி.மீ தூரம் வரையிலும் செல்லும்.

* இந்த 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் போன்ற பல ரைடிங் மோட்களை கொண்டிருக்கும்.

* எக்ஸ்ட்ரா பர்ஃபாமென்ஸிற்காக Ola S1 Pro-ல் ஹைப்பர் ரைடிங் மோட் கொடுக்கப்பட்டு உள்ளது.

* ஓலா நிறுவனத்தின் MoveOS-ல் இயங்கும் ஸ்கூட்டர்களில் பல பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

* இந்த ஸ்கூட்டர்கள் மல்ட்டி மைக்ரோஃபோன்களுடன் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளன. ஆன்ட்டி தெஃப்ட் சிஸ்டம், ஜியோ- ஃபென்சிங், வாட்டர் அன்ட் டஸ்ட் ரெசிஸ்டென்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் Ola S1 மற்றும் Ola S1 Pro-வில் கொடுக்கப்பட்டு உள்ளன.

Ola S1 & Ola S1 Pro விலை:

பேஸ் வேரியன்ட்டாக இருக்கும் Ola S1 ஸ்கூட்டரின் விலை ரூ.99,999-ஆவும், ஹை என்டாக இருக்கும் Ola S1 Pro ஸ்கூட்டரின் விலை ரூ.1,29,999 -ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பதிவு கட்டணம், மாநிலங்கள் வழங்க கூடிய மானியங்கள் போன்ற பல காரணிகளைப் பொறுத்து உங்கள் ஏரியாவில் ஆன்-ரோட் விலை மாறுபடலாம்.

நேரடி டெலிவரி..

புக் செய்யும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்கூட்டர் ஷிப்பிங் ஆவதற்கு முன் எந்த நேரத்திலும் கேன்சல் செய்யலாம். ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளரின்வீடுகளுக்கே நேரடியாக டெலிவரி செய்யப்படும். புக் செய்த 72 மணி நேரத்திற்குள் அவர்களுக்கு எஸ்டிமேட்டட் டெலிவரி டேட் கொடுக்கப்படும் என்று ஓலா கூறி இருக்கிறது.