கேரள மாநிலம் ஆலப்புழா அருகே அம்பலப்புழா பகுதியை சார்ந்த பிஜு என்பவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட bv -380 ரக கோழிகளை வாங்கியுள்ளார். அதில் ஒரு கோழி பிஜுவின் மகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதையடுத்து அவரது மகள் கோழிக்கு சின்னு என்று பெயரிட்டு வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்றைய தினம் கோழி தனது காலை தூக்கி நடக்க காலில் அடிபட்டிருக்கும் என பிஜு, சின்னு கோழியின் காலில் தைலம் போட்டு விட்டுள்ளார்.

காலை சுமார் 8:30 மணி அளவில் கோழி முதலில் ஒரு முட்டை போட்டுள்ளது. சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து 24  முட்டைகளை போட்டு வீட்டாரையே ஆச்சரியப்படுத்துள்ளது. இந்த தகவல் அறிந்த பலரும் அதிசய சின்னு கோழியையும் 24 முட்டைகளையும் பார்க்க பிஜுவின் வீட்டில் குவிந்துள்ளனர். 6 மணி நேரத்தில் 24 முட்டைகளை போட்ட சின்னு கோழி அதிசய கோழி என சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here