கலிபோர்னியா: அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான, சிலிகான் வேலி வங்கி (எஸ்விபி) திவாலானது. அந்த வங்கியின் பங்கு மதிப்பு தொடர்ந்து சரிந்தது இதற்கு காரணம். அதனால் அந்த வங்கியில் வைப்புத்தொகை வைத்திருந்த நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்புத்தொகையை திரும்பப் பெற்றனர். இந்நிலையில், அந்த வங்கியை வாங்கும் திட்டத்தில் தான் இருப்பதாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

அமெரிக்க கேமிங் நிறுவனமான ரேசரின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மின்-லியாங் டான், திவாலான சிலிகான் வேலி வங்கியை டிஜிட்டல் வங்கியாக மஸ்க் மாற்ற வேண்டும் என ட்வீட் மூலம் பரிந்துரைத்தார். “ட்விட்டர் நிறுவனம் சிலிகான் வேலி வங்கியை வாங்கி அதை டிஜிட்டல் வங்கியாக மாற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன்” என அவர் அந்த ட்வீட்டில் சொல்லி இருந்தார். அதற்கு பதில் கொடுத்துள்ளார் மஸ்க்.

இந்த யோசனைக்கு தான் தயார் என மஸ்க் பதில் அளித்துள்ளார். அவரது இந்த ட்வீட் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.