திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல இலவச டோக்கன் இன்று விநியோகம் செய்யப்பட்டது. இலவச டோக்கன் பெற முயன்ற பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 10க்கும் மேற்பட்டோருக்கு சிறிய காயங்களுடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இந்நிலையில் தண்ணீர் அளித்து தேவஸ்தானம் ஊழியர்கள் ஆசுவாசப்படுத்தினர்.