சிலம்பசரனுக்குத் தனது ட்விட்டர் பதிவில் புகழாரம் சூட்டியுள்ளார் இயக்குநர் கெளதம் மேனன்.
கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் நாயகியாக கயடு லோஹர் நடித்து வருகிறார். சிலம்பரசனின் அம்மாவாக முக்கியக் கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. வழக்கமான பாணியிலிருந்து விலகி, புதிய களத்தில் கெளதம் மேனன் படமொன்றை இயக்கி வருவது உறுதியாகிறது.
‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் 2-வது போஸ்டரைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கெளதம் மேனன் கூறியிருப்பதாவது:
“ஒரு அற்புதமான நடிகர் பணிபுரியும்போது அனைத்தும் அர்த்தமுள்ளதாகிறது. சிலம்பரசன் மற்றும் இதை மிகவும் சுலபமானதாக மாற்றும் பல அற்புதமான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் படப்பிடிப்பில் இருப்பது மிகவும் அருமையான விஷயம். இது இரண்டாவது போஸ்டர்”.
இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.