அ.தி.மு.கவின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்தது. அந்த பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் தொடர்பாக கடந்த அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று வலியுறுத்தினர் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

அதனையடுத்து, அ.தி.மு.கவில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரும் அவரவர் ஆதரவாளர்களை சந்தித்து பேசிவந்தனர். அதனையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் ஒற்றைத் தலைமை முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர்களிடம் பேசினார். அதனைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர் செல்வம் கடிதமும் எழுதினார்.

அதனால், பொதுக்குழு நடைபெறுமா என்ற குழப்பம் நிலவிவந்தது. இருப்பினும், எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழு கூட்டம் உறுதியாக நடைபெறும் என்று கூறிவந்தனர்.

இந்தநிலையில், ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். பெரும்பான்மை நிர்வாகிகள் வேண்டுகோளுக்கு ஏற்ப பொதுக்குழு நடைபெறும். நீங்களும் பொதுக்குழுவில் பங்கேற்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.