ரம்ஜான் பண்டிகையையொட்டி, செஞ்சி, கிருஷ்ணகிரி வாரச் சந்தைகளில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
செஞ்சியை சுற்றி மேய்ச்சல் நிலங்களை உள்ளடக்கிய மலைப்பகுதி உள்ளது. இங்குள்ள இறைச்சியின் தரம் கூடுதல் என்பதால், பல பகுதிகளின் வியாபாரிகள், செஞ்சிக்கு வந்து ஆடுகள் வாங்கிச் செல்வது வழக்கம்.
ரம்ஜான் பண்டிகையைஒட்டி, செஞ்சி சந்தைமேடில்நேற்று அதிகாலையில் இருந்தேவியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது
ஒரு செம்மறி ஆடு (15 கிலோஎடை) கடந்த வாரம் ரூ.6 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில்,நேற்று ரூ.11 ஆயிரம் வரையிலும் விற்கப்பட்டது. வெள்ளாடு உள்ளிட்ட மற்ற வகை ஆடுகள் ஒன்றுரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம்வரை விற்கப்பட்டன. செஞ்சிவாரச் சந்தையில் நேற்று ரூ.6கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானதாக கூறப்படுகிறது.
இதேபோல் கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளி வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை நேற்று வழக்கத்தை விட அதிகரித்திருந்தது. 10 ஆயிரம்ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
10 கிலோ எடைகொண்ட ஒரு ஆடு ரூ.12 ஆயிரம்முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று ஒரேநாளில் ரூ.3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.