சென்னை: திராவிடச் சிறுத்தை சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொள்கைக் குன்றாக உருவானவர்; கொள்கைத் தலைவராகச் செயல்பட்டு வருபவர். அவரது சிந்தனையும் செயலும் இன்னும் பல்லாண்டுகள் இந்த தமிழ்ச் சமூகத்துக்குப் பயன் தர வேண்டுமென வாழ்த்துகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.