வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டுஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் சமீபத்தில் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், “அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக அபரிமிதமாக உயர்ந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளது. மேலும், போலி நிறுவனங்களைத் தொடங்கிவரி ஏய்ப்பிலும், பண மோசடி யிலும்ஈடுபட்டுள்ளனர்” என கூறப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தன. இதற்கு, அதானி குழுமம் 413 பக்கங்களைக் கொண்ட மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், “ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது, உள்நோக்கம் கொண்டது. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அதில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க நிறுவனங்கள் பலனடைய வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல் அதில் இடம்பெற்றுள்ளது. இதை குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனம் மீதான தாக்குதல் என கருத முடியாது. இந்திய ஒருமைப்பாடு, இந்திய நிறுவனங்களின் தரம், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் எதிர்கால இலக்கு ஆகியவற்றுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல் ஆகும்” என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹிண்டன்பர்க் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எங்கள் கேள்விகளுக்கு அதானி குழுமம் பதில் அளிக்கவில்லை. குறிப்பாக, கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானிக்கும் சீனாவைச் சேர்ந்த சாங் சுங்-லிங் என்பவருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்துஅதானி குழுமத்துக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு குறித்தோ தெளிவுபடுத்தவில்லை.
அதானி குழுமத்தைச் சேர்ந்தஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவரின் பேரில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ததுஎப்படி என்பது குறித்து நாங்கள்சுட்டிக்காட்டி உள்ளோம்.
தேசியவாதம் என்ற போர்வை யில் அதானி குழுமம் தனது முறைகேடுகளை மூடி மறைக்க முயற்சி செய்கிறது.