அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட் டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி ஆணையர்க.நந்தகுமார் அனுப்பிய சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:

வாட்ஸ்அப்-பில் அனுப்புதல்

மாணவர்களின் கற்றல் திறனைமதிப்பீடு செய்யும் வகையில்1 முதல் 12-ம் வகுப்புக்கு வீட்டுப்பாடம் (அசைன்மென்ட்) வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது ஜுன் மாதத்துக்கான அசைன்மென்ட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதேபோல், மாதந்தோறும் அந்தந்தப் பாடங்களுக்கான அசைன்மென்ட்களை தயாரித்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். மாணவர்கள் அந்த கேள்விகளுக்கான விடைகளை புத்தகத்தை பார்த்து எழுதி வாட்ஸ்அப் மூலம் வகுப் பாசிரியர்களுக்கு அனுப்ப வேண் டும்.

ஆசிரியர்கள் அவற்றை ஆய்வு செய்து மாணவர்கள் பின்தங்கிய பாடப்பகுதிக்கு தெளிவான விளக்கத்தை காணொலியாக பதிவுசெய்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்க வேண்டும். அதேபோல், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை முறையாக மதிப்பீடு செய்கிறார்களா என்பதையும் தலைமைஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

மாணவர்களை வற்புறுத்தக் கூடாது

அதேநேரம், மாணவர்களுக்குஒன்றுக்கு மேற்பட்ட வீட்டுப்பாடங்களை ஒரேநேரத்தில் செய்து முடிக்க வற்புறுத்தக் கூடாது. இதுதொடர்பாக அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மைக் கல்விஅதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.