அரசின் திட்டங்கள் மக்களிடம் விரைந்து செல்கிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஒரு ரூபாய் செலவு செய்தாலும் அதன் நன்மை மக்களுக்கு எந்த குறையுமில்லாமல் கிடைக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.