மருத்துவ படிப்புக்கான முதுநிலை நீட் தேர்வில் அனைத்து வகையான பிரிவினருக்கும் கட் ஆப் 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியத்திற்கு மத்திய பொது சுகாதார சேவை இயக்ககம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், மருத்துவ படிப்புக்கான முதுநிலை நீட் தேர்வில் அனைத்து வகையான பிரிவினருக்கும் கட் ஆப் 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொதுப்பிரிவினருக்கு 35% ஆகவும், பொது மாற்றுத்திறனாளிகளுக்கு 30% ஆகவும், ஓபிசி, எஸ்சி , எஸ்டி பிரிவினருக்கு 25% ஆகவும் கட் ஆப் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட கட் ஆப் அடிப்படையில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு அதன் பட்டியலை அனுப்பி வைக்க மத்திய பொது சுகாதார சேவை இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.