சென்னை: கொரோனா பரவல் காரணமாக 4 பயணிகள் ரயில்கள் இன்று முதல் 6 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, நாகர்கோவில் – கோட்டயம் எக்ஸ்பிரஸ், கொல்லம் – திருவனந்தபுரம், கோட்டயம் – கொல்லம், திருவனந்தபுரம் – நாகர்கோவில் ரயில்கள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.