அமெரிக்காவில் உள்ள சாலைகளைக் காட்டிலும், வரும் 2024 முடிவில் இந்திய சாலைகள் தரமானதாக இருக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனை கோவாவில் உள்ள ஸூவாரி பாலத்தை திறந்து வைத்தபோது அவர் தெரிவித்துள்ளார்.

“பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு வரும் 2024 இறுதிக்குள் அமெரிக்காவில் உள்ள சாலைக் கட்டமைப்புகளை விட இந்தியாவின் சாலைக் கட்டமைப்பு வசதிகள் சிறப்பானதாக இருக்க வேண்டுமென முடிவு செய்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, இதனை அவர் பல்வேறு தருணங்களில் சொல்லி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நாடு பணக்கார நாடு என்பதால் அமெரிக்கா சாலைகள் தரமானதாக இல்லை. சாலைகள் தரமாக இருப்பதால்தான் அமெரிக்கா பாணக்கார நாடாக உள்ளது என முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி சொன்னதையும் அப்போது மேற்கோள் காட்டியிருந்தார். இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்ற வரும் 2024 டிசம்பருக்குள் இந்தியாவின் சாலை கட்டமைப்பு தரமானதாக மேம்படுத்தப்படும் எனவும் அவர் சொல்லியுள்ளார்.