எம்.ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக காற்று மற்றும் சூரிய ஆற்றலை பயன்படுத்தி ஒரு புதுவித கலப்பின ஆற்றல் மூலம் தனது உற்பத்தி ஆலைகளை நடத்தி வருகிறது.

உலகளவில் புதுப்பிக்க முடியாத ஆற்றல்களை (non-renewable resources) மட்டுமே அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக பெட்ரோல், டீசல், நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பு போன்ற அனைத்துமே புதுப்பிக்க முடியாத ஆற்றல்கள் மூலமாக நமக்கு கிடைக்கின்றவை. இதை அதிக அளவில் நாம் பயன்படுத்தி வருவதால் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இதன் தட்டுப்பாடு தொடங்கிவிட்டது.

இதற்கு மாற்றாக புதுப்பிக்க கூடிய ஆற்றல்களை (renewable resources) நாம் பயன்படுத்த வேண்டும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் பல காலமாக கூறி வருகின்றனர். அந்த வகையில் சூரிய ஒளி ஆற்றல், காற்று ஆற்றல், நீர் ஆற்றல் போன்றவற்றை கொண்டு நமக்கு தேவையான மின்சாரம் முதல் வாகனங்களுக்கு தேவையான எரிபொருள் வரை நம்மால் உற்பத்தி செய்ய முடியும். இந்நிலையில் எம்.ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக காற்று மற்றும் சூரிய ஆற்றலை பயன்படுத்தி ஒரு புதுவித கலப்பின ஆற்றல் மூலம் தனது உற்பத்தி ஆலைகளை நடத்தி வருகிறது.