இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission- TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும்.

இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும். 1929ல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பெற்ற ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பெற்றது.

தற்போது இந்த அமைப்பில் 2021 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் காலியாக உள்ள 26 உதவி புவியியலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைக்கான விவரங்கள் : 

விளம்பர எண்592 அறிவிப்பு எண்.12/2021
நிறுவனம்டி.என்.பி.எஸ்.சி (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்)
வேலையின் பெயர்Assistant Geologist
காலிப்பணியிடங்கள்26
வயதுகுறைந்தபட்சம் 18 – 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி24.09.2021
 ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி25.08.2021
கல்வி தகுதிபுவியியல் பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பள விவரம்குறைந்தபட்சம் ரூ.37,700 முதல் அதிகபட்சம் ரூ.1,19,500 வரை வழங்கப்படும்.
தேர்வு நடைபெறும் தேதி20.11.2021 – 21.11.2021
தேர்வு நடைபெறும் இடம்சென்னை
விண்ணப்ப கட்டணம்ரூ.150 ஆன்லைனில் செலுத்த வேண்டும்
தேர்ந்தெடுக்கும் முறைஎழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முக்கிய தேதிகளின் விவரம்
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிட விவரம்

உதவி புவியியலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற  இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

https://www.tnpsc.gov.in/Document/english/12_2021_COMBINED%20GEOLOGY_ENG.pdf