ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதி, கபிலனாக நடித்த ஆர்யா இருவரும் சைக்கிளில் செல்லும் காட்சியை வைத்து ஏராளமான மீம்ஸ்கள் வெளியாகின.
நடிகர் பசுபதியின் உண்மையான ட்விட்டர் அக்கவுண்டை அறிமுகப்படுத்தியுள்ளார் ஆர்யா.
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம் சமீபத்தில் வெளியானது. அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படம் மக்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிப் படமாக கொண்டாடப்பட்டது.
ஆர்யா ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தில், துஷாரா விஜயன், கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1970-களில் பிற்பகுதியில் நடக்கும் கதையான சார்பட்டா படம், குத்துச் சண்டையை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ளது.
சார்பட்டா பரம்பரை – இடியப்ப பரம்பரை என இரு குத்துச்சண்டை பரம்பரைகளுக்கிடையே நடக்கும் போட்டியை கதைகளமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டிருந்தது. படத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதி, கபிலனாக நடித்த ஆர்யா இருவரும் சைக்கிளில் செல்லும் காட்சியை வைத்து ஏராளமான மீம்ஸ்கள் வெளியாகின.
ரங்கன் வாத்தியார் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, பசுபதியின் பெயரில் ஏராளமான போலி ட்விட்டர் அக்கவுண்டுகள் உருவாகின. இந்நிலையில் நடிகர் ஆர்யா, ”வாத்தியாரே இதான் ட்விட்டர் வாத்தியாரே. குத்துச்சண்டைய விட ரத்த பூமி. உன்னோட பேர்ல இங்க நெறைய பேர் இருக்காங்கன்னு தெரிஞ்சதும், ஒரிஜினல் நாதாண்டானு உள்ள வந்த பாத்தியா. உன் மனசே மனசு தான். வா வாத்தியாரே இந்த உலகத்துக்குள்ள போலாம்” எனக் குறிப்பிட்டு பசுபதியின் ட்விட்டர் அக்கவுண்டை குறிப்பிட்டிருக்கிறார் ஆர்யா.
இதற்கு பதிலளித்த பசுபதி, “ஆமாம் .. கபிலா, குத்துச்சண்டையே உலகம்னு இருந்துட்டேன், பரம்பரைக்கு ஒண்ணுனா மொத ஆளா வந்துருவேன். நான் உன் சைக்கிள்லயே பின்னாடி ஒக்கந்துகிறேன், என்ன எல்லா எடத்துக்கும் கூட்டிகினு போ” என்று தெரிவித்திருக்கிறார்.