ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்த்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார்.
இது தொடர்பாக, இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்தை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார். இந்த திறப்பு விழாவில் தமிழக ஆளுநர் பான்வாரிலால் புரோஹித், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் செயல்பட்ட சட்டப்பேரவை, 1921-ம் ஆண்டு ஜனவரி 12-ல் தொடங்கி வைக்கப்பட்டது.
அதை நினைவுபடுத்தும் வகையில், சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவைக் கொண்டாட தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி, விழா திறப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.