தொடக்கத்தில் இருந்தே முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலையில் இருந்து வருகிறார். காலை 11 மணி நிலவரப்படி மம்தா பானர்ஜி 34 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின்  பாவனிபூர் தொகுதி இடைத்தேர்தலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலையில் இருப்பதை தொடர்ந்து அவரது வீட்டின் முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்குவங்க மாநிலத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அதன் முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் அக்கட்சியின் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் சுமார் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அவர் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட போதிலும், 6 மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே அவரால் முதல்வராக தொடர முடியும்.

இதை தொடர்ந்து மம்தா போட்டியிடுவதற்காக பவானிபூர் தொகுதி எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து, பவானிபூர் மற்றும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 30ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.  இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் விவரம் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது.

தொடக்கத்தில் இருந்தே முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலையில் இருந்து வருகிறார். காலை 11 மணி நிலவரப்படி மம்தா பானர்ஜி 45,874 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பிரியங்கா  11,892  பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீஜிப் பிஷ்வாஸ் 1,515 வாக்குகள் பெற்றுள்ளார். சுமார்  34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா முன்னிலை பெற்றுள்ளார்.

மம்தா பானர்ஜி அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளதால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மம்தா பானர்ஜியின் வீட்டின் முன்பு ஏராளமானோர் குவிந்து  கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.